சமையலறைக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிம்பிள் டிப்ஸ்!

How To Get Rid Of Cockroach From Kitchen : நம்மில் பலரின் சமையலறைக்குள் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்திருப்போம். இதை விரட்ட, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Oct 15, 2024, 03:23 PM IST
  • கரப்பான் பூச்சிகளை விரட்டியடிக்க டிப்ஸ்
  • இதை செய்தால் திரும்ப வராது!
  • என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சமையலறைக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிம்பிள் டிப்ஸ்! title=

How To Get Rid Of Cockroach From Kitchen : சமையல் செய்து கொண்டு இருக்கும் போது, எங்கோ சென்று ஓடி ஒளிந்து கொள்ளும் தன்மை கொண்டவை, இந்த கரப்பான் பூச்சிகள். அது கூட, அவை தன் ராஜ்ஜியத்த சமையலறையில் தாெடங்கிய புதிதில்தான். அதன் பின்பு யார் இருக்கிறார், இல்லை என்பதையெல்லாம் அவை பார்ப்பதில்லை. இரவில் சமையலறையில் ஆக்கிரமிக்கும் இவை, பகலில் அனைவரையும் பயமுறுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கிறது. இவற்றை நம் சமையலறையில் இருந்தும் வீட்டிலிருந்தும் மொத்தமாக ஒழித்துக்கட்ட முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

சமையலறை சுத்தம்:

சமையல் மேடை, சமையல்யறையில் இருக்கும் தரை மற்றும் உணவு சிந்திய இடங்கள் ஆகியவற்றை தவறாமல் வாரம் இரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அந்த அறையை கூட்டி பெருக்குவதோடு நிறுத்தாமல் கண்டிப்பாக துடைக்கவும் வேண்டும். ஃப்ளோர் க்ளீனர் போட்டு துடைத்தால் இன்னும் நன்று. இதனால், பூச்சி பொட்டுகள் வராமல் இருக்கும்.

நுழைவுகளை அடைக்க வேண்டும்:

கரப்பான் பூச்சிகளால் எந்த சிறிய துளைகள் மூலமாகவும் உள்நுழைய முடியும். எனவே, உங்கள் சமையலறையில் எந்த ஓட்டை இருந்தாலும், விரிசல் இருந்தாலும் அதை அடைக்க வேண்டும். சமயங்களில் சிங்கில் இருக்கும் பைப் மற்றும் குழாய் ஓட்டைகளில் இருந்தும் கூட கரப்பான் பூச்சிகள் வரலாம். எனவே, வெள்ளை சிமெண்ட், துணிகள் ஆகியவற்றை இந்த துளைகளை அடைக்க பயன்படுத்தவும். 

உணவு:

எந்த உணவாக இருப்பினும் அதை சமையலறையில் திறந்து வைக்க வேண்டும். இது, கரப்பான்பூச்சி மட்டுமல்ல இன்னும் பல்வேறு பூச்சிகளையும் ஈர்க்கலாம். எனவே, இரவில் மிச்சமாகியிருக்கும் உணவுகளை காற்று புகாத ஒரு டப்பாவில் அல்லது பையில் போட்டு அடைக்க வேண்டும். 

கசிவுகளை சரிசெய்யவும்:

கிச்சனில் ஏதேனும் விரிசல்கள் அல்லது லீக் ஆகும் இடங்கள் இருந்தால் அதை சரி செய்யவும். சமையலறையில் எந்த இடத்திலும் தண்ணீர் லீக் ஆகாத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். 

குப்பை:

பலர், கிச்சனில் ஒரு குப்பை தொட்டியையும், ஹாலில் ஒரு குப்பை தொட்டியையும் வைத்திருப்பர். இதை பல சமையங்களில் எடுத்து வெளியே போட மறந்து விடுவர். இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு, பல பூச்சிகளை வீட்டிற்குள் வரவழைக்கவும் வழிவகை செய்து விடும். இந்த குப்பைகளை கிளர பல கரப்பான் பூச்சி உள்பட பல பூச்சிகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தலைவிரித்தாடும் சோம்பேறித்தனத்தை ஓட ஓட விரட்டலாம்! காலையில் ‘இதை’ பண்ணுங்க..

இயற்கை விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்:

கொசு விரட்டுவதற்கு, பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு என பல இயற்கை விரட்டிகள் இருக்கின்றன. புதினா எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய் உள்ளிட்டவை கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவும். எனவே, இவற்றை கிச்சன் முழுவதும் ஒரு இரவில் தெளித்து விட்டு மறுநாள் காலையில் அந்த கரப்பான் பூச்சிகளை வெளியேற்றவும். 

பாத்திரங்கள்:

ஒரு சிலர் இரவில் பாத்திரங்களை கழுவி விட்டு, அப்படியே சமையல் மேடையில் கவிழ்த்து வைத்திருப்பர். மேலும், சில பொருட்களும் ஆங்காங்கே சிதைந்து கிடக்கும். இது, கரப்பான் பூச்சிகள் மறைந்து வாழ உதவி புரிபவையாக இருக்கும். எனவே, இரவு உறங்க செல்வதற்கு முன்பு சரியாக அனைத்து பாத்திரங்களையும் அடுக்கி வைப்பது நன்று. 

ஆய்வுகள்:

அடிக்கடி, கரப்பான் பூச்சிகள் வீட்டில் நடமாடுகிறதா, இல்லையா என்பதை பார்க்க வேண்டும். அவற்றின் குட்டிகள் அல்லது முட்டைகள் எங்காவது தென்பட்டால் கூட, உடனே அதை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | வீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News