ஓட்ஸ் - சியா விதைகள் கொண்டு தயாரிக்கபடும் உணவால் ஏற்படும் நன்மைகள்!

ஆரோக்கியமான காலை உணவை சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த “ஓட்ஸ் மற்றும் சியா விதைகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவை கண்டிப்பாக முயற்சிக்கவும்

Last Updated : May 30, 2020, 05:23 PM IST
ஓட்ஸ் - சியா விதைகள் கொண்டு தயாரிக்கபடும் உணவால் ஏற்படும் நன்மைகள்! title=

ஆரோக்கியமான காலை உணவை சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த “ஓட்ஸ் மற்றும் சியா விதைகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவை கண்டிப்பாக முயற்சிக்கவும்

ஓட்ஸ் மற்றும்  சியா விதைகளில் உள்ள ஊட்டசத்து மற்றும் ஒமேகா 3 ஆகியவை ஒரு ஆரோக்கியமான காலை உணவை கொடுக்கும்.

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான காலை உணவை தயாரிப்பது உண்மையில் மிகப்பெரிய சவாலான காரியம். PLOS Biology என்ற உயிரியல் இதழில்வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மனித உடலின்பயாலஜிகல் க்ளாக் மற்றும் தூக்கம், உணவு செரிமானத்தை நிர்ணயிக்கிறது என கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், உணவுப் பழக்கம்,  முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது என்றும்,  மாலை உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் எதுவும் சாப்பிடாமல் இருந்தால், உடல்  எடை கட்டுபாட்டிற்குள் இருக்கும் என்று கூறுகிறது.

மொழியாக்கம் - ஹேமலதா.எஸ்

இந்நிலையில் அனைவரும் விரும்பும் வகையில், ஆரோக்கியமான சாக்லேட் ஓட்ஸ் மற்றும் சியா விதை  உள்ள காலை உணவு ஒன்றை எவ்வாறு செய்யவேண்டும் என இந்த பதிவில் நாம் பகிர்ந்து இருக்கிறோம்.

  • சாக்லேட், ஓட்ஸ் மற்றும் சியா விதை கொண்டு தயாரிக்கப்படும் காலை உணவு செய்வது எப்படி?

தேவையான  பொருட்கள்

2 டேபிள்ஸ்பூன் - டார்க் சாக்லேட்
2 டேபிள்ஸ்பூன் - ஓட்ஸ்
2 டேபிள்ஸ்பூன் - சியா விதைகள்
1 கப் - பால்
3- 4 - குங்குமப்பூ
2 டேபிள்ஸ்பூன் - தேன்
1 சிட்டிகை - இலவங்கப்பட்டை தூள்
5 - பாதாம் (நறுக்கியது)
8  டேபிள்ஸ்பூன் – நீர்

செய்முறை

  • சியாவிதைகளை ஒரு பாத்திரத்தில் 20 நிமிடங்கள்வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
  • இரண்டாவது கிண்ணத்தில், ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூ மீது சூடான பால் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற விடவும்.
  • ஒரு டம்ளர் அல்லது கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறவத்துள்ள ஓட்ஸில் பாதி ஓட்ஸை பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். சிறிதுதேன் சேர்க்கவும்
  • க்ரேட் செய்யப்பட்ட சாக்லேட் சேர்க்கவும். பின்னர் ஊறவைத்த சியா விதைகளை தூவவும்.
  • மீண்டும், ஓட்ஸ் ஒரு அடுக்கு வைக்கவும். சில துள் தேன் சேர்த்துக்கொள்ளவும். இலவங்கப்பட்டை தூள் தூவவும்.
  • ஊறவைத்த சியா விதைகளையும், இறுதியாக க்ரேட் செய்யப்பட்ட சாக்லேட்டையும் சேர்க்கவும்.
  • நறுக்கிய பாதாமை மேல் பரப்பில்  தூவி அலங்கரிக்கவும்.

Trending News