பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை யாருக்கு இல்லை? பணம் சேமிப்பதும் பணம் ஈட்டுவதற்கு சமம்தான். சேமிப்பு என்பது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கமாகும். நம்மிடம் பணம் இருக்கும்போது நாம் சேமிக்கும் தொகை, அவசர காலங்களில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதிகம் சம்பாதித்தாலும், குறைவான சம்பளம் ஈட்டினாலும், அதில் ஒரு பகுதியை கண்டிப்பாக அனைவரும் சேமிக்க வேண்டும். பணத்தை சேமிப்பதற்கான டாப் 10 டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. செலவுகளை கண்காணிக்கவும்
உங்கள் பணத்தை தேவை இல்லாமல் செலவு செய்கிறீர்களா என்பதை கண்டறியுங்கள். அப்படி செய்தால், தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்வது எளிதாக இருக்கும்.
2. அவசிய மற்றும் ஆடம்பர செலவுகளை பிரிக்கவும்
தேவையான அத்தியாவசிய செலவுகள் எவை? ஆடம்பர செலவுகள் எவை? இந்த புரிதல் கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. பண தட்டுப்பாடு இருக்கும்போது அவசியமற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
3. கடன் வாங்காதீர்
மாதா மாதம் ஆகும் செலவுகளுக்கே கடன் வாங்குவது மிக தீய பழக்கமாகும். உங்கள் வரவுக்கு ஏற்ப செலவுகளை செய்தால், கடன் வாங்குவதை தவிர்க்கலாம்.
4. சேமிப்பு அவசியம்
உங்கள் சம்பளத்தில் ஒரு தொகையை கண்டிப்பாக சேமிக்க வேண்டும். வீட்டில் அப்படியே பணத்தை செமிப்பது சரியாக இருக்காது. ஏனெனில், அதையும் எடுத்து நாம் பெரும்பாலும் செலவு செய்துவிடுவோம். ஆகையால் வங்கி சேமிப்பு கணக்குகள், தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் ஆகிய ரிஸ்க் இல்லாத திட்டங்களில் சேமிக்கலாம்.
5. காப்பீட்டுத் திட்டங்கள்
உங்கள் அனைத்து காப்பீட்டுத் திட்டங்களுக்கும் கவரேஜை மதிப்பாய்வு செய்யவும். காப்பீட்டுத் திட்டங்களை உங்கள் வயது, குடும்ப நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகமான காப்பீட்டுத் திட்டங்களும் பணத்தை வீணாக்கும்.
6. கேளிக்கை செலவுகள்
சுற்றுலா, துணிமணி, நகை வாங்குதல் என இதுபோன்ற செலவுகளுக்காக பணத்தை சேமித்து வைப்பது நல்லதாகும். இதனால் திடீரென்று பணத் தேவை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
7. சேவைகளுக்கான செலவுகளை குறைக்கவும்
கேபிள் டிவி, சினிமா, சலவை என நாம் பயன்படுத்தும் சேவைகளுக்கான செலவை குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
8. மின்சார பயன்பாட்டை குறைக்கவும்
இது மிக முக்கியமாகும். தேவையற்ற இடங்களில், மின் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவற்றை பார்த்து பார்த்து அணைக்க வேண்டும்.
9. ஆன்லைன் முறை
முடிந்தவரை அனைத்து பணிகளையும் ஆன்லைனில் முடித்துக்கொள்ளவும், இதனால், நேரம் மற்றும் போக்குவரத்து செலவுகளை கண்டிப்பாக சேமிக்கலாம்.
10. வெளியே உண்பது
இந்நாட்களில் வீட்டில் சமைப்பதை விட வெளியிருந்து சாப்பிடும் பழக்கம் அதிகமாகிவிட்டது. இது அதிக அளவு செலவுகளுக்கு வழி வகுக்கின்றது. உடல் ஆரோகியத்துக்கும் இது நல்லதல்ல. இதை கட்டுப்படுத்தினால் மாதா மாதம் அதிகம் சேமிக்கலாம்.
மேலும் படிக்க | Post Office Scheme: 200 ரூபாய் டெபாசிட் செய்தால் லட்சங்கள் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ