விரைவில் தொடங்கும் 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2! ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் செல்வராகவன் தனது பிளாக்பஸ்டர் ஹிட் படமான  '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 22, 2023, 09:24 AM IST
  • 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்புள்ளது.
  • '7ஜி ரெயின்போ காலனி-2' படத்தின் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும்.
  • '7ஜி ரெயின்போ காலனி-2' படத்தில் ரவி கிருஷ்ணா தான் ஹீரோவாக நடிக்கிறார்.
விரைவில் தொடங்கும் 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2! ஹீரோ யார் தெரியுமா? title=

தமிழ் திரையுலகில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறமையோடு பிரபலமாக இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  அடிக்கடி இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் சில கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்டாகி வருகிறார்.  சமீபகாலமாக படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார், இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இயக்குனர் செல்வராகவன் 19 வருடங்களுக்கு பிறகு தனது ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.  இந்த செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் தனுஷ் நடிப்பில் வெளியான 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ அல்லது கார்த்தி நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்று யோசித்து வந்தனர்.   இன்றுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும் படிக்க | என்னுடைய பெயர் சுந்தர் சி இல்லை! இதுதான் என் பெயர்! விளக்கம் அளித்த சுந்தர் சி!

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி செல்வராகவன் தனுஷை வைத்து புதுப்பேட்டை  படத்தின் இரண்டாம் பாகத்தையோ அல்லது கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தையோ இயக்கப்போவது இல்லை.  இயக்குனர் செல்வராகவன் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  2004-ம் ஆண்டு வெளியான  '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி, மனோரமா போன்ற பலர் நடித்துள்ளனர்.  இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.  நா.முத்துக்குமார் கைவண்ணத்தில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளும், இசையும் இன்றுவரை பலரது பிளேலிஸ்டிலும் முதன்மை பட்டியலில் இருந்து வருகிறது.

தற்போது '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தின் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் ரவி கிருஷ்ணா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.  இப்படத்தின் முதல் பாகத்தில் சோனியா அகர்வால் இறந்துப்போவது போல் காட்டப்படும் என்பதால் இதன் இரண்டாம் பாகத்தில் வேறொரு நாயகி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்காக படக்குழு வேறொரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.  விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும், படத்தில் நடிக்கப்போகும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 30 நிமிடம் கூட பார்க்க முடியல! தெறித்து ஓடும் ரசிகர்கள்! கிசி கா பாய் கிசி கி ஜான் விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News