அரசியலை சினிமா சூட்டிங்போல நினைத்துக்கொள்கிறார்கள் - விஜய் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் கருத்து

அரசியல் களத்தை சினிமா சூட்டிங்போல நடிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 23, 2023, 07:04 AM IST
  • விஜய் அரசியலுக்கு வரவேற்கிறோம்
  • ஆனால் சினிமா சூட்டிங் அல்ல அரசியல்
  • என்ன அரசியல் பேசுகிறோம் என்பது முக்கியம்
அரசியலை சினிமா சூட்டிங்போல நினைத்துக்கொள்கிறார்கள் - விஜய் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் கருத்து  title=

வானதி சீனிவாசன் நிகழ்ச்சி

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் வாங்கப்பட்ட டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பள்ளிக்கு அந்த பொருட்களை பயன்பாட்டுக்கு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், " அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவர்களை ஒரே வகுப்பில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர். ஒருபுறம் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என சொல்லுகிறோம்.  

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை பாஜகவிற்கு அழைக்கிறார் அண்ணாமலை: திமுக எம்.பி செந்தில்குமார் பளீர்

மோசமான நிலையில் பள்ளிகள்

ஆனால், ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை அரசாங்க பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது. ஆசிரியர் தேர்வுகளில் ஒவ்வொருமுறையும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, கல்வித் துறை அமைச்சர் பள்ளிகளுக்கு தேவையான விஷயங்களை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் நடைபெறும் ஜி 20 மாநாடு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

பாஜகவினர் கைதுக்கு கண்டனம்

பாஜகவினர் கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சிறிய நபர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்தாலும் விமர்சனங்களை முன் வைத்தாலும் கைது செய்வது, இந்த அரசாங்கம் தங்களை பலம் இல்லாதவர்களாக கருதுகிறார்கள் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் குறித்து விமர்சனம் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடியையும் மத்திய அரசை பற்றியும் மோசமான கருத்து தெரிவிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பதிலளித்தார்.

சினிமா சூட்டிங் அல்ல அரசியல்

தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து வானதி சீனிவாசன் பேசினார். அவர் பேசும்போது, " அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் அரசியலுக்கு வந்தார் என்றால் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஏனென்றால் இளைஞர்கள் அதிகமாக அரசியலில் பங்குபெறும் போது ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும். எனவே நடிகர் விஜய்யும் நேரடியாக அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் விஜய் மட்டுமல்ல எந்த நடிகரையும் வரவேற்கிறோம். இப்படி வரும்போது மக்களுக்கு எப்படி வேலை செய்கிறார்கள், மக்களுடைய பிரச்சினைகளை எப்படி பேசுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன்பு வந்த ஒரு நடிகர் அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறினார். படப்பிடிப்பு போல அரசியலை நினைத்துக் கொள்கின்றனர். அது அரசியல் கிடையாது. வாழ்க்கையை கொடுப்பதுதான் அரசியல்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? ​அறிவிப்பு இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News