புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் மின்னல் தாக்கிய வீட்டினை முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டார்!
புதுவையில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை கொட்டி தீர்த்து வருகின்றது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பெய்த மழை சிறிதுநேரமே நீடித்து நின்றது. பின்னர் மீண்டும் மழை கொட்ட துவங்கியது. இரவு முழுவதும் லேசாகவும், பலமாகவும் மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் நேற்று மழை பெய்து கொண்டிருந்த போது புதுவை எல்லைக்கு உட்பட்ட நெல்லிதோப்பு பகுதியின் பள்ளித்தோட்டத்தில் குடியிறுப்பு வீடு ஒன்றை மின்னல் தாக்கியது. இதில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புதுவை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
HCM @VNarayanasami visited the house affected by lightning strike at Pillaithottam, #Nellithope #Puducherry earlier this morning. pic.twitter.com/avaDJYciur
— CMO Puducherry (@CMPuducherry) October 22, 2018
தொடர்ந்து மதியம் 2 மணி வரை லேசாக மழை பெய்தது. தொடர்ந்த பெய்து வரும் மழை காரணமாக புதுவை மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மேலும் இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் இருக்க புதுவை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் நேற்று மின்னர் தாக்கிய வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டார்!