வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டம் சொல்வது என்ன... இந்து வாக்கு வங்கி உருவாகிறதா..!!!

பாஜக ஏற்படுத்தி வரும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் எதிர் மறை ஈர்ப்பு. அதாவது ஆங்கிலத்தில் Anti-affectionately என்று கூறுவார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2020, 01:21 PM IST
  • பாஜக ஏற்படுத்தி வரும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் எதிர் மறை ஈர்ப்பு. அதாவது ஆங்கிலத்தில் Anti-affectionately என்று கூறுவார்கள்.
  • தமிழகத்தில் உள்ள வீடுகளில் அன்றாடம் ஒலிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தை அவமனப்படுத்தியது, இந்துக்கள் மனதில் குறிப்பாக இந்து பெண்கள் மனதில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
  • முஸ்லிம்களின் பாதுகாவலர் தான் என கூறிக் கொள்ளும் கட்சியான திமுக தான், கலாம் என்றால் கலகம் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை அவமானப்படுத்தியது.
வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டம்  சொல்வது என்ன... இந்து வாக்கு வங்கி உருவாகிறதா..!!! title=

கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு மாநில அரசியலை மாற்ற முடியுமா? முடியும் என்று நிரூபித்துக் கொண்டு இருக்கிறது தமிழக பாஜக.  

பாஜக ஏற்படுத்தி வரும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் எதிர் மறை ஈர்ப்பு. அதாவது ஆங்கிலத்தில் Anti-affectionately என்று கூறுவார்கள். 

அதாவது நாம் விரும்பும் நேசிக்கும் அல்லது ஆதரிக்கும் ஒரு விஷயம் அல்லது நபர் மீது, நமக்கு கடுமையான கோபமோ அல்லது எதிர்ப்போ வந்தால், அதற்கு முற்றிலும் எதிரான விஷயத்தை நோக்கி நமது மனம் இயல்பாகவே ஈர்க்கப்படும்.

இந்த உத்தியை கடைபிடித்து பாஜக (BJP) பல மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர் மறை ஈர்ப்பு என்பது அரசியலில் கூட இருக்கிறது. 

இதற்கான களம் தமிழ்நாட்டிலும் உருவாகி விட்டது எனலாம். தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்கள் கூறப்படுகின்றன. 

அதில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் யூட்யூப் சேனலில் கந்தர் சஷ்டி கவசத்தை மிகவும் ஆபசாமாக சித்தரித்து பேசியது பெரும் புயலை கிளப்பி விட்டது. 

தமிழகத்தில் (Tamilnadu) உள்ள வீடுகளில் அன்றாடம் ஒலிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தை அவமனப்படுத்தியது, இந்துக்கள் மனதில் குறிப்பாக இந்து பெண்கள் மனதில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. வேல் யாத்திரைக்கு கூடும் பெண்கள் கூட்டம் இதை உறுதிபடுத்துகிறது.

அதனால் புண்பட்ட இந்துக்கள் கவனம், திமுக தொடர்ந்து எதிர்த்து வரும் பாஜக மீது விழுந்துள்ளது. பாஜக தலைவர் எல்.முருகன் விரதமிருந்து மேற்கொள்ளும் வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டமே அதற்கு சாட்சி. அனைத்து தடைகளையும் மீறு துள்ளி வரும் வேல் யாத்திரைக்கு அமோக ஆதரவை வழங்கி வருகிறார்கள் மக்கள். திருப்பூர், பழனி என எங்கு சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறது. 

ALSO READ | #துள்ளி_வருது_வேல்: துள்ளி வரும் வேலைக் கண்டு கழகங்கள் அஞ்சுவது ஏன்..!!!

இந்த வெற்றிவேல் யாத்திரை (Vel Yatra)  அவசியமா என்றார்கள், இந்த யாத்திரை அவசியம் மட்டும் அல்ல. அத்தியாவசியம். இந்த யாத்திரை செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு வருகிறது என மாநில தலைவர் டாக்டர்திரு.எல்.முருகன் கூறியுள்ளார். 

இது தானா சேர்ந்த கூட்டம். காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல. வேல் யாத்திரையில், பெண்கள், ஆர்வத்துடன் பங்கேற்று ஆடல், பாடலுடன் கலக்குகிறார்கள். தடையை மீறி துள்ளி வரும் வேலை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.

தமிழகத்தில் பெண்கள் ஒரு முக்கிய வாக்கு வங்கி என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதா ஜெயிக்க காரணமாக இருந்தது பெண்கள் வாக்கு வங்கி என்றால் மிகையில்லை.

இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதும், இந்துக்கள் பண்டிகைக்கும் வாழ்த்து கூறாமல் விடுமுறை தினம் என கூறுவதும், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் என திமுக இருந்து வரும் நிலையில், திமுக (DMK) தான் உண்மையான மதவாத கட்சி என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிரூபணம் ஆகி வருகிறது.

அதோடு திமுக பிரிவினை வாதத்தை ஆதரிக்கும் கட்சியாகத் தான் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. இந்து எதிர்ப்பு போராட்டம் தொடங்கி ஒவ்வொரு காலத்திலும் தன்னை நிரூபித்து வருகிறது.

ALSO READ | EVM எனப்படும் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு சாத்தியமா..?

முஸ்லிம்களின் பாதுகாவலர் தான் என கூறிக் கொள்ளும் கட்சியான திமுக தான், கலாம் என்றால் கலகம் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை அவமானப்படுத்தியது. 

ஆனால், பாஜக அவரை குடியரசுத் தலைவராக்கியது. சிறுபான்மையினரையும் பட்டியல் இனத்தவர்களையும் வாக்கு வங்கியாக பயன்படுத்தாமல், அனைவரையும் உள்ளடக்கிய உண்மையான வளர்ச்சி திட்டங்களை முன் வைக்கும் சமூக நீதி கட்சியாக வளர்ந்து வருகிறது என்பதை மக்கள் உணரத்தொடங்கி விட்டனர். 

முதலில் அப்துல் கலாமின் திறமையை அங்கீகரித்த பாஜக இப்போது, மீண்டும் தலித் இனத்தை சேர்ந்த ராம் நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக்கி, தமிழகத்தில் டாக்டர்.எல். முருகனை தமிழக பாஜகவின் தலைவராக்கி, முறையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

திரு. எல். முருகன் (DR.L.Murugan) அவர்களும், கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றி வருகிறார். வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதை அதற்கு திரளும் கூட்டமே சாட்சி. 

இதனால், இந்து வாக்கு வங்கி உருவாகிறதோ என்ற அதிர்ச்சி எதிர்தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதை நிரூபிக்கிறது.

ALSO READ | தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News