தற்போது தனி சாதிகளாக இருக்கும் ஏழு சாதிகளை ஒன்றாக இணைத்து "தேவேந்திர குல வேளாளர்" என அறிவிக்கும் படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்த "தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா" மக்களவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) நிறைவேற்றபட்டது.
உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரியானா கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா (Satyadev Narayan Arya) ஒப்புதல் அளித்தார்.
10.5% உள்ஒதுக்கீடு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து நாளை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது.
பொதுப்பிரிவு இடஒதுக்கீடு ஒரு பிரிவுக்கு சொந்தமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு நிலையை மாற்ற வேண்டும் எதின்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வரும் போராட்டத்தில், நாளை பேரூராட்சிகள் முன் அனைவரும் திரள வேண்டும் என்று பாமக (PMK) தலைவர் ராமதாஸ் (Ramadoss) அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:
உயர்கல்வியிலும், உயர்நிலைப் பணிகளிலும் வன்னியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் வன்னியர்களுக்காக 20% தனி இட ஒதுக்கீடு கோரி PMK சார்பில் போராட்டம்..
சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடு (69% Reservation) வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம்: சகோதர சமுதாயங்கள் அனைத்தும் மனதார ஆதரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் மடல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலைவாய்ப்பில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக TNPSC முன் போராட்டம் நடத்தப்படும். இந்தத் தகவலை பா.ம.க மூத்தத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.