மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்ய காரணம் என்ன?

மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது திங்கள்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இதன் பின்னர், மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 25, 2020, 07:42 PM IST
மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்ய காரணம் என்ன? title=

மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது திங்கள்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இதன் பின்னர், மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான அறிக்கையினை 94 வயதான பிரதமர் மகாதீர் வெளியிட்டுள்ளார். அவர் தனது ராஜினாமாவை அதிகாலை 5 மணிக்கு நாட்டின் ராஜாவுக்கு சமர்ப்பித்துள்ளார் (கோலாலம்பூரின் நேரத்தின்படி). மகாதீர் காஷ்மீர் மீதான வெளிப்படையான எதிர்ப்பிற்காகவும், பாகிஸ்தானுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியதற்காகவும் நீண்ட காலமாக தலைப்புச் செய்திகளில் இருந்துவருகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கட்சித் தலைவர் முஹைதீன் யாசின் சமூக ஊடக இடுகையின்படி, மகாதீரின் கட்சி பிரபூமி பெராசாட்டு மலேசியாவும் கூட்டணி அரசாங்கமான பக்காத்தான் ஹரப்பனை விட்டு வெளியேறியுள்ளது. கடந்த சில வாரங்களாக நடந்து வரும் அரசியல் போருக்குப் பின்னர் மகாதீரின் ராஜினாமாவின் இந்த முடிவு வந்துள்ளது. இதனிடையே மகாதீரின் கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வந்தன, அதில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசு அன்வர் இப்ராஹிமுக்கு இடம் வழங்கப்படாது எனவும் தெரிகிறது.

இரண்டு பெரிய அரசியல் பிரமுகர்களுடன் சண்டையிட்ட வரலாற்றை மலேசியா கொண்டுள்ளது, இதில் 94 வயதான மகாதீருக்கும் 72 வயதான அன்வருக்கும் இடையிலான தகராறு அதன் புதிய அத்தியாயமாகும். 

முன்னதாக UMNO ஆதிக்கம் செலுத்தும் பாரிசன் தேசிய கூட்டணியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற 2018 தேர்தலுக்கு முன்னர் அன்வாரும் மகாதீரும் ஒன்று சேர முடிவு செய்தனர். அன்வர்-மகாதீர் கூட்டணி ஆறு தசாப்தங்களாக மலேசியாவில் அதிகாரத்தை நிலைநாட்டிய கட்சியை தோற்கடித்து, அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக்கின் நாற்காலியைப் பறித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News