பயறுகளில் சிறந்தது எது? போட்டியே இல்லாமல் ஏகபோகமாய் தேர்வாவது பாசிப்பயறு

Green Gram Pulse: நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ள சத்தான பருப்பு பாசிப்பயறு... அதிலும் முளைக்கட்டிய பாசிப்பயறின் ஊட்டச்சத்துகள், சொல்லில் அடங்காதவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2022, 01:47 PM IST
  • நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ள சத்தான பருப்பு பாசிப்பயறு
  • முளைக்கட்டிய பாசிப்பயறின் ஊட்டச்சத்துகள் வேற லெவல்!
  • குழந்தைகள் முதல் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒற்றைப் பயறு
பயறுகளில் சிறந்தது எது? போட்டியே இல்லாமல் ஏகபோகமாய் தேர்வாவது பாசிப்பயறு title=

Food for Health: நமது பாரம்பரிய உணவுமுறைகளில் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. பயறு மற்றும் பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை என்றாலும், பாசிப்பயறு அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் கால்சியமும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளது என்றால், புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ள சத்தான பருப்பு என்பதால், தோல் நீக்காத பாசிப்பயறு சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கும் உகந்த ஊட்டச்சத்து உணவாகும். 

எளிதில் ஜீரணமாகும் பாசிப்பருப்பு, கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. வேகவைத்த பாசிப்பயிறை கர்ப்பிணிகள் தினசரி அடிப்படையில் உண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். அதிலும் முளைக்கட்டிய பாசிப்பயறின் ஊட்டச்சத்துகள், சொல்லில் அடங்காதவை

குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்பதால்தான், மருத்துவர்கள், பாசிப்பயறு மற்றும் பாசிப்பருப்பை பரிந்துரைக்கிறார்கள். காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

மேலும் படிக்க | வாழைப்பழத்தை சாப்பிட்டா எலும்பு பலமாகுமா?
 
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கல் குணமாகும். பாசிப்பருப்பு, பல்வேறு கீரை வகைகளுடன் சேர்த்து  சமைத்தால், அவற்றின் நன்மைகளை மேலும் அதிகரித்து, சத்தான உணவாக மாறும். 
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் பாசிப்பயறு உதவுகிறது.

பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைமுடியை பாசிப்பயறு மாவு கொண்டு அலசினால், முடி பளபளக்கும், பொடுகுத் தொல்லை நீங்கும். பச்சைப்பயறின் தோலை நீக்கினால் கிடைக்கும் பருப்பை பாசிப்பருப்பு என்ரு சொல்வோம். பாசிப்பருப்பு பிற தானியங்களுடன் சேர்த்தும் சமைக்கலாம். அதை தனியாகவும் பல விதங்களில் சமைத்து உண்ணலாம்.

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு குட்பை சொல்லும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! 

பாசிப்பருப்பை, கஞ்சியாக்கி உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும் பாசிப்பயறு என்பது தெரியுமா? பாசிப்பருப்பை உட்கொள்வது மன அழுத்தம் அல்லது மனச்சிக்கல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த பருப்பை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.  

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாசிப்பருப்பு உதவுகிறது. பாசிப்பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை. பலவீனமாக இருப்பவர்கள், பாசிப்பருப்பை சாப்பிட்டால் உடல் வலுவாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | ஜாலியா ஒல்லியாகலாம் வாங்க! இந்த ஜூஸ் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமானதும் கூட

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News