இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒருநாள் போட்டி இன்று சென்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைப்பெறுகிறது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
முன்னதாக, கடந்த பிப்., 1 ஆம் நாள் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் 6 ஒருநாள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அணியின் தலைவர் டூ பிளஸிஸ்-க்கு முதல் ஒருநாள் போட்டியில் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை சோத்தித்த மருத்துவர்கள் டூ பிளஸிஸ் 3 முதல் 6 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் டூ பிளஸிஸ், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிரடி நாயகன் ஏபிடி வில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார்.
டூ பிளஸிஸ்-க்கு பதிலாக ஐடென் மார்கம் அணியை வழிநடத்துவார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
#TeamIndia Captain @imVkohli wins the toss and elects to bowl first in the 2nd ODI against South Africa #SAvIND pic.twitter.com/kCw2kG6b0N
— BCCI (@BCCI) February 4, 2018