வாயுத்தொல்லை பிரச்சனையா? இந்த இயற்கையான வழிகளில் நிவாரணம் காணலாம்

Lifestyle Changes To Control Acidity: பண்டிகை காலத்தில் நம்மை அறியாமல் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 8, 2024, 05:30 PM IST
  • அவசரமாக சாப்பிடுபவர்களுக்கு, உணவுடன் சேர்ந்து, வயிற்றில் வாயுவும் சேரத் தொடங்குகிறது.
  • இது அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.
  • உணவை நன்கு மென்று சாப்பிடவேண்டும்.
வாயுத்தொல்லை பிரச்சனையா? இந்த இயற்கையான வழிகளில் நிவாரணம் காணலாம் title=

Lifestyle Changes To Control Acidity: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலருக்கு வாயுத்தொல்லை, ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை ஆகியவை ஏற்படுகின்றன. செரிமான சீர்கேடாலும் இது நடக்கின்றது. ஆகையால் செரிமானத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு அன்றாட உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது மிக அவசியம்.

பண்டிகை காலத்தில் நம்மை அறியாமல் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உணவைத் தவிர, பல வாழ்க்கை முறை தவறுகளும் வாய்வு, வயிற்று வலி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. அதேபோல், அசிடிட்டி பிரச்னையும் இதன் காரணமாக நீடிக்கிறது. பொரித்த மற்றும் வறுத்த உணவுகள் மற்றும் இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உருவாகிறது. இது அமிலத்தன்மை பிரச்சனையை அதிகரிக்கிறது. ஏற்கனவே இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த உணவுகளை மீண்டும் சாப்பிடும் போது, மீண்டும் மீண்டும் அமிலத்தன்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பண்டிகைக் காலத்திற்குப் பிறகு அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உங்கள் வாழ்க்கைமுறையில் சிறப்பு கவனம் செலுத்தி சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும். 

அமிலத்தன்மை ஏன் ஏற்படுகிறது?

வயிற்றில் இருக்கும் ஆசிட் அதிக அமிலத்தன்மை கொண்டது. இது உணவை ஜீரணிக்கவும் உடல் அதை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. அதன் உதவியால், உடல் ஊட்டச்சத்து பெறுகிறது. நொதிகளின் உற்பத்தியும் தொடங்குகின்றன. ஆனால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் அல்சர் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதன் விளைவு உணவை ஜீரணிக்கும் திறனிலும் தெரிகிறது.

அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் வாழ்க்கைமுறையில் தேவைப்படும் மாற்றங்கள்

உணவின் அளவில் கட்டுப்பாடு: 
அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அவ்வப்போது சிறிது சிறிதாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் அதிக உணவை உட்கொள்ள வேண்டாம். ஆசிட் ரிஃப்ளெக்சைத் தவிர்க்க, 3 முதல் 4 மணி நேர இடைவெளியில் உணவை உண்ணுங்கள். இது தவிர இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு, உடனடியாக தூங்குவதும் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | வாரம் ஒருமுறை அவகாடோ ஜூஸ் குடிங்க... உடம்பு முழுக்க ஊட்டச்சேத்து சேரும்!

ஆரோக்கியமான உணவு: 
அனைத்து விதமான செரிமான பிரச்சனையிலிருந்தும் உடலைப் பாதுகாக்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இது தவிர, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவின் அளவைக் குறைத்து, முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் விதைகள் ஆகியவற்றுடன் சாதாரண உணவை ஆரோக்கியமான சமச்சீர் உணவாக மாற்ற வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

அதிக தண்ணீர்: 
குளிர் பானங்கள் மற்றும் காஃபைன் கலந்த பானங்களுக்கு பதிலாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் உருவாவதை தடுக்கலாம். இது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் அபாயத்தையும் குறைக்கிறது. இது தவிர, சரியான அளவில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை சீர் செய்து, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகின்றது.

உணவை நன்றாக மென்று உட்கொள்ள வேண்டும்: 
அவசரமாக சாப்பிடுபவர்களுக்கு, உணவுடன் சேர்ந்து, வயிற்றில் வாயுவும் சேரத் தொடங்குகிறது. இது அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. உணவை நன்கு மென்று சாப்பிடவேண்டும். இதனால் செரிமான சாறுகள் உணவை உறிஞ்சுவதற்கு உதவும்.

உடற்பயிற்சி: 
தினமும் உடற்பயிற்சி செய்வது மிக அவசியம். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது தியானம், யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, கார்டியோ உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்வது நல்லது. இதன் காரணமாக, உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க இது உதவும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் இந்த உணவுகளை கண்டிப்பாக சேருங்க...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News