தற்போது இந்தியா முழுவதும் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இந்த குளிர்காலத்தில் நம் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இந்த காலத்தில் நமது சருமம் எப்போதும் இருப்பதைவிட வறண்டு போகும், இதனால் முகத்தில் உள்ள அனைத்து பொலிவுகளும் காணாமல் போகிவிடும். உடலின் மற்ற பாகங்களை எப்படி பராமரிக்கிறோமோ, அதே போல் நமது சருமத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். முதலில், தோல் பராமரிப்பு பற்றி பேசினால், அதை 3 பகுதிகளாக நாம் பிரிக்கலாம். குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை சேதமடையாமல் பாதுகாக்கும் எளிய முறைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த பழங்கள்!
- குளிர்காலத்தில் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் குளிர்ந்த காற்றின் காரணமாக தோல் வறண்டு, துவண்டு போகும். குளிர்காலத்தில் முகத்தை சுத்தம் செய்வதற்கான சில பொதுவான குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு காணப்படும், எனவே லேசான மற்றும் ஈரப்பதமூட்டும் பேஸ் வாஸ் பயன்படுத்தவும். மேலும், குளிர்காலத்தில் எப்போதும் சாதாரண தண்ணீரை மட்டும் பயன்படுத்துங்கள், ஏனெனில் இது சரும ஈரப்பதத்தை பராமரித்து, வறட்சியைக் தடுக்கிறது. அதேபோல் ஆல்கஹால் இல்லாத டோனரை பயன்படுத்தவும். இது வறண்ட மற்றும் இறுக்கமான சருமத்திற்கு நல்லது. இதனால் சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
- உங்கள் தோல் வகை மற்றும் தேவைகளை மனதில் வைத்து, அதற்கேற்ப முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள் அல்லது சோப்புகளை வாங்கவும். நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், உங்கள் சருமத்தைப் பாதுகாக்க எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இவை பொதுவான பரிந்துரைகளே தவிர, இதற்கு அதிகமாக தோல் பிரச்சனையை எதிர்கொண்டால், நீங்கள் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும். குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக்குவது மிகவும் முக்கியம், ஏனென்றால் குளிர்ந்த காற்று காரணமாக தோல் எளிதில் காய்ந்துவிடும்.
- உங்கள் தோலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் பண்புகளை கொண்ட ஒரு நல்ல ஈரப்பதமூட்டும் கிரீம் அல்லது லோஷனைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அந்த மாய்ஸ்சரைசரில் ஜோஜோபா எண்ணெய், ஷியா வெண்ணெய், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் கிளிசரின் போன்ற பொருட்கள் அதிகமாக இருக்கலாம். கிரீம்கள் அல்லது லோசனை பயன்படுத்துவதற்கு முன், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க முதலில் நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால் உடல் நீரேற்றமாக இருக்கும். குளிர்காலத்தில் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, எப்போதும் மென்மையான மற்றும் சூடான ஆடைகளை அணியுங்கள் மற்றும் குளிர்காலத்தில் அதிக நேரம் வெளியில் அலைய வேண்டாம்.
- அதே போல இரவில் தூங்கும் முன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். இது இரவு முழுவதும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். குளிர்காலம் வந்தவுடன் வெண்ணீரில் வெண்ணீரில் குளிப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். குளிர்காலத்தில் எப்போதும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் சூடான நீர் சருமத்தை மேலும் உலர்த்தும். வீட்டில் ஈரப்பதம் குறைவாக இருந்தால், ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துங்கள், இதனால் சருமத்திற்கு அதிக ஈரப்பதம் கிடைக்கும்.
- குளிர்காலத்தில், சருமத்திற்கு ஊட்டமளிப்பதற்கும் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும் ஒரு கப் ஓட்ஸ் மற்றும் இரண்டு கப் தயிர் கலந்து, மென்மையான பேஸ்ட் செய்யவும். இதனை சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் ஓட்ஸ் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அடுத்து, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிறிய எலுமிச்சை சாறு கலந்து வீட்டில் ஈரப்பதமூட்டும் ஃபேஸ் பேக்கை உருவாக்கவும். இதனை சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவு கலந்து தோலில் தடவவும். இது சருமத்தை குளிர்வித்து ஈரப்பதமாக்கும்.
மேலும் படிக்க | தினமும் கிராம்பு டீ குடிங்க... இதுல இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ